மதுரை மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் ரூ.10.5 கோடியில் நவீன நீச்சல்குளமும், ரூ. 9.47 கோடியில் செயற்கையிழை வளைகோல் பந்தாட்ட மைதானமும் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

Published Date: July 12, 2025

CATEGORY: CONSTITUENCY

நீச்சல்குளம், வளைக்கோல் பந்தாட்ட மைதானத்து அடிக்கல்

மதுரை மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் ரூ.10.5 கோடியில் நவீன நீச்சல்குளமும், ரூ. 9.47 கோடியில் செயற்கையிழை வளைகோல் பந்தாட்ட மைதானமும் அமைக்கும் பணிக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. உலக இளையோர் வளைகோல் பந்தாட்டப் போட்டி மதுரையில் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி, மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் சர்வதேசத் தரத்திலான செயற்கையிழை வளைகோல் பந்தாட்ட மைதானம் ரூ. 9.47 கோடியில் அமைக்கப்பட உள்ளது.

இதேபோல, இந்த விளையாட்டரங்க வளாகத்தில் ஒலிம்பிக் தரத்துக்கு இணையான டைவிங் வசதியுடன் கூடிய நவீன நீச்சல் குளம் 50 மீட்டர் நீளத்திலும், 25 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி அதற்கான கல்வெட்டுகளைத் திறந்துவைத்தார். அமைச்சர்கள் எ.வ. வேலு, பி. மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஆர். ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையொட்டி,மதுரையில்நடைபெற்றநிகழ்ச்சியில் மாவட்டஆட்சியர் கே.ஜே.பிரவீன்குமார், மேயர் வ. இந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Media: Dinamani